இந்தியாவின் பிரதமரான மோடி மற்றும் பாஜக கட்சி மக்கள் மத்தியில் மிக செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் (Pew) என்கிற அமைப்பு ஊடக கருத்துக்கணிப்பில் மிகவும் புகழ்பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்திய மக்களிடையே செல்வாக்குப் பெற்ற தலைவராக பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2464 பேரிடம் எடுக்கப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், 88% மக்கள் மோடிக்கு ஆதரவாக வாக்களித்து உன்னளர். மேலும் 58% ஓட்டுகளைப் பெற்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவரை விட 30% பின் தங்கி உள்ளார்.
இவர்கள் இருவரையும் அடுத்து 57% மக்களின் ஓட்டுகளைப் பெற்று இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. 4வது இடத்தில், டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகம் பேர் சிறப்பு என்று வாக்களித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.