ரூ 5 லட்சம் கோடி கடன் வாங்கிய முகேஷ் அம்பானி! ஜியோ & ரிலையன்ஸ் நிறுவனங்களின் புதிய கடன்

Mukesh Ambani Syndicate Loan: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு நாணயக் கடன்கள் வடிவில் வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து ஐந்து பில்லியன் டாலர்கள் அளவிலான கடனை இரண்டு தவணைகளில் பெற்றுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 6, 2023, 07:17 PM IST
  • மூலதனச் செலவுக்காக கடன் வாங்கிய முகேஷ் அம்பானி
  • ரிலையன்ஸ் ஜியோ வாங்கிய அண்மைக்கடன் விவரம்
  • கார்ப்பரேட் உலகின் மிகப்பெரிய கடனை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்
ரூ 5 லட்சம் கோடி கடன் வாங்கிய முகேஷ் அம்பானி! ஜியோ & ரிலையன்ஸ் நிறுவனங்களின் புதிய கடன் title=

கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய சிண்டிகேட் கடன் வாங்கியவர் என்ற பெயரை உருவாக்கியிருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து இரண்டு தவணைகளில் ஐந்து பில்லியன் டாலர்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு நாணயக் கடன்கள் வடிவில் பெற்றுள்ளது. சிண்டிகேட் கடன் என்பது வங்கிகள் / நிதி நிறுவனங்களின் குழுமத்தில் இருந்து வாங்கப்படும் கடன் ஆகும்.

கார்ப்பரேட் சிண்டிகேட் கடன்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் அதன் டெலிகாம் யூனிட் ஜியோ இன்ஃபோகாம் ஆகியவை மிகப்பெரிய சிண்டிகேட் கடனை பெற்றுள்ளன. கார்ப்பரேட் வரலாற்றில் இது மிகப்பெரிய சிண்டிகேட் கடன் என்று அழைக்கப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு நாணயக் கடன்கள் வடிவில் வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை திரட்டியுள்ளது.  

மேலும் படிக்க | மளமளவென சரிந்த அதானி - அம்பானி சொத்துகள்..! இருவருக்கும் எவ்வளவு இழப்பு தெரியுமா?

55 வங்கிகள் & $3 பில்லியன் கடன்

கடந்த வாரம் ரிலையன்ஸ் 55 வங்கிகளில் இருந்து 3 பில்லியன் டாலர்களை திரட்டியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் 18 வங்கிகளிடம் இருந்து இரண்டு பில்லியன் டாலர் கூடுதல் கடனாகப் பெற்றுள்ளது.

கடந்த நிதியாண்டு வரை (மார்ச் 31 ஆம் தேதி வரை) 3 பில்லியன் டாலர் கடன் வாங்கப்பட்டதாகவும், இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 2 பில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ஜி நெட்வொர்க்கை தொடங்குவதற்கு பணம் 
ரிலையன்ஸ் ஜியோ இந்தத் தொகையை மூலதனச் செலவுக்காகப் பயன்படுத்தும். இந்தப் பணத்தைக் கொண்டு, நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ தொடங்கும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க | என்னது ட்ரம்ப் பாஜகவில் இணைகிறாரா? வைரலாகும் எம்.பி., மஹுவா மொய்த்ராவின் பதிவு!

தைவானில் உள்ள சுமார் இரண்டு டஜன் வங்கிகள் மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா, HSBC, MUFG, Citi, SMBC, Mizuho மற்றும் Credit Agricole போன்ற உலகளாவிய வங்கிகள் உட்பட 55 கடன் வழங்குநர்களிடமிருந்து முதலில் $3 பில்லியன் கடன் திரட்டப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

முதல்கட்ட கடனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, கூடுதலாக இரண்டு பில்லியன் டாலர் கடன் வாங்க ரிலையன்ஸ் முடிவு செய்தது.

இதற்குப் பிறகு, அதே நிபந்தனைகளின் கீழ் 55 கடன் வழங்குபவர்களிடமிருந்து இரண்டு பில்லியன் டாலர்கள் புதிய கடனும் எடுக்கப்பட்டது. ரிலையன்ஸ் வாங்கியுள்ள இந்தக் கடனே, கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய சிண்டிகேட் கடன் என்று சொல்லப்படுகிறது

மேலும் படிக்க | கேரளா அட்டப்பாடி ’மது’ ஆணவக் கொலை வழக்கு தீர்ப்பு ! 13 குற்றவாளிகளுக்கு ஏழாண்டு சிறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News