மும்பை: தாவூத் இப்ராஹிமின் மருமகன் ரிஸ்வான் கஸ்கர் மற்றும் மேலும் இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை மகாராஷ்டிரா குற்றவியல் சட்டம் ஒழுங்கு ஆணையம் (எம்.சி.ஓ.சி.ஏ) மேற்கொண்டு உள்ளது. மிரட்டி பணம் பறித்தல் குற்றத்திற்காக ரிஸ்வான் கஸ்கர் கடந்த வாரம் ஜூலை 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதுவும் நாட்டை விட்டு வெளியேறி தப்பிக்கச்ச சென்ற போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, மிரட்டி பணம் பறித்தல் குற்றச்சாட்டுகளின் சோட்டா ஷகீல் மற்றும் ஃபஹீம் முச்மாச் ஆகியோர் ஈடுபட்டு வந்துள்னர். கடந்த 10 ஆண்டுகளில், சோட்டா ஷகீல் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகளும், ஃபஹீம் முச்மாச் மீது 50 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ரிஸ்வான் கஸ்கர் தாவூத்தின் சகோதரர் இக்பால் கஸ்கரின் மகன். தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகீல் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தி வரும் மும்பை காவல்துறை, ஜூலை 17 ஆம் தேதி அஃப்ரோஸ் வதேரியா, அகமது ரசாவை கைது செய்தது.
மும்பை காவல்துறையின் மூத்த பொலிஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, அஃப்ரோஸ் வதேரியா எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது, அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
ரிஸ்வான் கஸ்கர் சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளி என்றும் ஹவாலா பரிவர்த்தனைகளை மேற்கொண்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மும்பையை அடைந்தவுடனேயே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அந்த அதிகாரி கூறினார்.