தேசத்திற்கே ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்!!
வட இந்தியா முழுவதும் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி அப்போதைய ஆட்சியிலிருந்த மத்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக அறிவித்தது. பல மொழிகள், பல கலாசாரங்கள் கொண்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி நாளாக இந்தி திவாஸ் தினம் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக ஒரு மொழி இருப்பது அவசியம். அதிக மக்களால் பரவலாக பேசப்படும் இந்தி தான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கக்கூடிய மொழி என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்; ``இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் தான் முடியும்.
आज हिंदी दिवस के अवसर पर मैं देश के सभी नागरिकों से अपील करता हूँ कि हम अपनी-अपनी मातृभाषा के प्रयोग को बढाएं और साथ में हिंदी भाषा का भी प्रयोग कर देश की एक भाषा के पूज्य बापू और लौह पुरूष सरदार पटेल के स्वप्प्न को साकार करने में योगदान दें।
हिंदी दिवस की हार्दिक शुभकामनाएं
— Amit Shah (@AmitShah) September 14, 2019
இன்று இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழி கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அது போல் அமித்ஷாவின் கருத்து தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
हिंदी भारत में सर्वाधिक बोली एवं समझी जाने वाली भाषा है जो हम सभी भारतीयों को एकता के सूत्र में पिरोती है एवं विश्व में हमारी पहचान भी है।
आप सभी को हिंदी दिवस की हार्दिक शुभकामनाएं।
आइए हम सभी अपने दैनिक जीवन में हिंदी के प्रयोग को बढ़ाएं एवं दूसरों को भी प्रेरित करें। pic.twitter.com/GAK1MWFezk
— Jagat Prakash Nadda (@JPNadda) September 14, 2019