பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் நவாஜோத் சிங் வாக்களித்தார்!!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை தொடங்கிய உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் நவாஜோத் சிங் வாக்களித்துள்ளார்.

Updated: Dec 17, 2017, 12:23 PM IST
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் நவாஜோத் சிங் வாக்களித்தார்!!
Zee News Tamil

பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை 8 மணி முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. இதையடுத்து, இத்தேர்தலுக்கான பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த உள்ளாட்சி தேர்தல் பஞ்சாப்பில் அமிர்தசரஸ், ஜலந்தர், பாட்டியாலா பொண்ட மூன்று மாநகராட்சியில் நடைபெறுகிறது. இதில், 32 முனிசிபல் மற்றும் நகர் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

தற்போது இந்த உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் நவாஜோத் சிங் மற்றும் அவரது மனைவி நவ்ஜோத் கவுர் சித்தும் தங்கள் வாக்குகளை அளித்தனர்.