ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அவர்களிடமிருந்து அனுமதி பெற்ற ஒரு நாள் கழித்து, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டின் 15 பேர் கொண்ட தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமை கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லாவை அவரது இல்லத்தில் சந்தித்தது.
NC தலைவர்கள் ஹஸ்னைன் மசூதி மற்றும் அக்பர் லோன் ஆகியோர் ஃபாரூக் மற்றும் அவரது மனைவி மோலி ஆகியோரை ஸ்ரீநகரில் உள்ள வீட்டில் சந்தித்த வீடியோவை செய்தி நிறுவனம் ANI பகிர்ந்துள்ளது.
#WATCH National Conference (NC) leaders Hasnain Masoodi and Akbar Lone meet former J&K CM Farooq Abdullah and his wife Molly Abdullah at their residence in Srinagar pic.twitter.com/G842irK9NJ
— ANI (@ANI) October 6, 2019
81 வயதான ஃபாரூக் அப்துல்லாவின் மகனும், NC துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஒரு மாநில விருந்தினர் மாளிகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஃபாரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவிற்கு கட்சியின் மாகாணத் தலைவர் தேவேந்தர் சிங் ராணா தலைமை தாங்குகிறார், இதில் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். முன்னதாக இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாலிக் அவர்களிடம் ராணா அனுமதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
A National Conference (NC) delegation meets former J&K CM Farooq Abdullah at his residence in Srinagar pic.twitter.com/Ez0AeacT7T
— ANI (@ANI) October 6, 2019
சட்டப்பிரிவு 370-ன் கீழ் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கைவிட்டதிலிருந்து, ஃபாரூக் மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்களையும், மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களையும் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து என்.சி தலைவர்கள் வேதனை தெரிவித்தனர்.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் மதன் மந்தூ கூறுகையில், என்.சி உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அவசர கூட்டத்தில் உயர் தலைமையை சந்திக்க முடிவு செய்தனர் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இதுதொடர்பான சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.