குடியரசு துணை தலைவர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் வெங்கையா நாயுடு!!

Last Updated : Jul 18, 2017, 12:46 PM IST
குடியரசு துணை தலைவர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் வெங்கையா நாயுடு!! title=

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெங்கய்யா நாயுடு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 

வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி துணை குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.  

எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லியில் நேற்று பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டார். 

வெங்கய்யா நாயுடு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது மத்திய அமைச்சர் பதவியை வெங்கைய்யா நாயுடு ராஜினாமா செய்தார்.

ஜனாதிபதி துணை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வெங்கையா நாயுடு, இன்று தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல, எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோபாலகிருஷ்ண காந்தியும், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News