நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!!

Updated: Jan 1, 2017, 11:13 AM IST
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!!
Zee Media Bureau

அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், நலமும் பொங்கட்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி 

பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் 2017 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பிறந்துள்ள இந்த 2017-ம் ஆண்டில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் அமைந்திடும் வகையில் இருக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் கொண்டாட்டங்கள் புத்தாண்டின் முக்கிய அம்சமாக, கோவில்களிலும், ஆலயங்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.