புதுடெல்லி: ஸ்ரீநகரின் லால் சோக்கில் இன்று (திங்கள்கிழமை) காலை நடந்த கையெறி குண்டுவெடிப்பில் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் பொதுமக்கள் 9 பேர் காயமடைந்தனர். காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதியின் தொடர்பு இருப்பதாக காவல் துறை சந்தேகிக்கின்றனர். அதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றன.
ஸ்ரீநகரில் உள்ள லால் சோக்கின் மவுலானா ஆசாத் சாலையில் கையெறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரர் மாநிலத்தில் 370வது சிறப்பு பிரிவை ரத்து செய்ததை அடுத்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் இயல்புநிலை மெதுவாக திரும்பத் தொடங்கியுள்ளது. பொது மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Jammu and Kashmir: 10 injured in a grenade attack in a market on Maulana Azad Road in Srinagar. pic.twitter.com/VSHDdZSuBR
— ANI (@ANI) November 4, 2019
இதற்கிடையில், காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.