நான்கு குற்றவாளிகளுக்கும் எதிராக மரண தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய தேதியை வெளியிட்டுள்ளது!!
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணையின் போது குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து நான்கு குற்றவாளிகளுக்கும் எதிராக மரண தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய தேதியை வெளியிட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012 Delhi gang-rape case: Delhi court has issued a fresh date for execution of death warrant against all the four convicts. Convicts to be executed on March 3 at 6 am. https://t.co/lUI3flqwzU
— ANI (@ANI) February 17, 2020
மேலும், நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட் நிலையில், 3-வது முறையாக மீண்டும் வாரண்ட் பிறப்பிப்பு.