இந்தியாவில் சாலை வசதிகள் இல்லாமல் ஏராளமான மக்கள் தவித்துவருகின்றனர். இந்தியா முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது ஒன்றிய அரசு கூறிவந்தாலும் பல கிராமங்களில் மக்கள் நடப்பதற்கு பாதை என்பதே யதார்த்தமான உண்மை. இதனால் மருத்துவமனைக்கு செல்லக்கூட மக்கள் கடும் இன்னல்படுகின்றனர்.
அந்தவகையில் கர்நாடகாவில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 75 வயது மூதாட்டி பெண் ஒருவர் வசித்துவருகிறார்.
மேலும் படிக்க | ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சென்னைக்கு பணியிட மாற்றம்
இதற்கிடையே ஜோக்-கார்கல் நகரம், சாலை அமைக்க நகராட்சியில் சாலை வசதி அமைக்கக் கோரி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்தச் சூழலில் 75 வயது மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மருத்துவமனைக்கு போக கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது மகனும், கணவரும் அந்த மூதாட்டியை தூளி கட்டி மருத்துவமனைக்கு சுமந்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மூஸ்வாலா உடல் தகனம் - சொந்த கிராமத்தில் குவிந்த ரசிகர்கள்
வீடியோவை பார்த்த பலரும் சாலை அமைக்காததற்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் தேவையான சாலையை ஏற்படுத்தி காரில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு வழியை உருவாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR