அதிதீவிர புயலாக மாறியுள்ள "டிட்லி" புயல் ஒடிசா - ஆந்திரா இடையே கரையை கடந்தது. இதனால் ஒடிசாவில் புயல் காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருகிறது.
புயல் காரணமாக ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் சிகாகுளம் அருகே மிகப் பெரிய நிலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரிசா மாநிலத்தின் கோபால்பூருக்கும் ஆந்திர மாநில கலிங்கப்பட்டினத்துக்கும் இடையில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#WATCH: #TitliCyclone makes landfall in Gopalpur. #Odisha pic.twitter.com/x49MsPkU9U
— ANI (@ANI) October 11, 2018
இதனால் ஒரிசா மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் மின்சார கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்துளன. ஒரிசாவின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 836 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
"டிட்லி" புயல் காரணத்தால் ஒரிசா மாநிலத்தில் இன்றும் நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 1000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.