Ola, Uber-ல் அடிக்கடி செல்பவரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நல்ல செய்தி

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு சவாரிக்கும் பொருந்தும் கட்டணத்தில் குறைந்தது 80 சதவீதம் கட்டணம் நிறுவனத்துடன் இணைந்துள்ள வாகனத்தின் ஓட்டுநருக்குக் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2020, 10:36 AM IST
  • Ola-Uber போன்ற டாக்சி நிறுவனங்களுக்கு கட்டணம் அதிகரிக்க அரசாங்கம் வரம்பை விதித்துள்ளது.
  • இனி அடிப்படை கட்டணத்திலிருந்து ஒன்றரை மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிக்க முடியாது.
  • இந்தியாவில் வாடகை டாக்சி வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
Ola, Uber-ல் அடிக்கடி செல்பவரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நல்ல செய்தி title=

மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2020:

செயலி அடிப்படையிலான டாக்சி சேவையை வழங்கும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் கடுமையான விதிகளை விதித்துள்ளது. ஓலா-ஊபர் (Ola-Uber) போன்ற டாக்சி நிறுவனங்களுக்கு கட்டணம் அதிகரிக்க அரசாங்கம் ஒரு வரம்பை விதித்துள்ளது.

பி.டி.ஐயின் செய்தியின்படி, இப்போது Ola, Uber போன்ற இந்த நிறுவனங்கள் அடிப்படை கட்டணத்திலிருந்து ஒன்றரை மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிக்க முடியாது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. ஏனென்றால் டேக்சி சேவை நிறுவனங்களின் அதிகபட்ச கட்டணங்களை கட்டுப்படுத்துமாறு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2020 வெளியிடப்பட்டன

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்கள் 2020 இன் படி, அடிப்படை கட்டணங்களில் 50 சதவீதம் வரை குறைந்தபட்ச கட்டணமாகவும் அடிப்படை கட்டணங்களில் ஒன்றரை வரை மடங்கு வரை அதிகபட்சமாகவும் கட்டணம் வசூலிக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இது மக்கள் வாகனங்களை உபயோகிப்பதை எளிதாக்கி ஊக்குவிக்கும் என்றும் இதுதான் போக்குவரத்து கொள்கையின் முக்கியமான அம்சம் என்றும் அமைச்சகம் கூறியது. இது துரிதமான கட்டணக் கொள்கையை அங்கீகரிக்கும். இது தேவை மற்றும் வழங்கலுக்கு ஏற்ப வளங்களின் பயன்பாட்டை உறுதி செய்வதில் பொருத்தமானதாக இருக்கும்.

ALSO READ: பைக் சவாரி இன்னும் பாதுகாப்பானது; BIS அல்லாத ஹெல்மெட் விற்பனைக்கு தடை..!

ஓட்டுநருக்கு குறைந்தது 80 சதவீத பங்கு கிடைக்கும்

புதிய வழிகாட்டுதல்களின் (Guidelines) படி, ஒவ்வொரு சவாரிக்கும் பொருந்தும் கட்டணத்தில் குறைந்தது 80 சதவீதம் கட்டணம் நிறுவனத்துடன் இணைந்துள்ள வாகனத்தின் ஓட்டுநருக்குக் கிடைக்கும். மீதமுள்ள பங்கை நிறுவனங்கள் வைத்திருக்க முடியும்.

நகர்ப்புற டாக்சி கட்டணத்தை மாநில அரசு (State Government) நிர்ணயிக்காத மாநிலங்களில், கட்டணக் கட்டுப்பாட்டுக்கான அடிப்படை கட்டணமாக ரூ .25-30 கருதப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிறுவனங்களால் சேர்க்கப்படும் பிற வாகனங்களுக்கும் மாநில அரசுகள் கட்டணம் நிர்ணயிக்க முடியும்.

Ola, Uber போன்ற டாக்சி சேவை இந்தியாவில் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இந்த சேவை தற்போது முக்கிய பெருநகரங்கள் (Metro Cities) மற்றும் பல அடுக்கு 2 நகரங்களில் கிடைக்கிறது. வரவிருக்கும் காலத்தில், அதிகமான நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபடவுள்ளன.

ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் இந்த வாடகை டாக்சி வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

ALSO READ: Covid-19 Vaccine தயாரிக்கும் 3 நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்வார்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News