அரபிக் கடலில் அவசரமாக இறக்கப்பட்ட ONGC ஹெலிகாப்டர்

ஓஎன்ஜிசியின் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் மும்பை அருகே அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இரண்டு பணியாளர்கள் விமானிகள் மற்றும் ஏழு பயணிகள் இருந்தனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2022, 03:03 PM IST
அரபிக் கடலில் அவசரமாக இறக்கப்பட்ட ONGC ஹெலிகாப்டர் title=

ஓஎன்ஜிசியின் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் மும்பை அருகே அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இரண்டு பணியாளர்கள் விமானிகள் மற்றும் ஏழு பயணிகள் இருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் மீட்கப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 

மும்பைக்கு மேற்கே உள்ள சாகர் கிரண் என்ற எண்ணெய் கிணறு அருகே இந்த விபத்து நடந்தது. அவசர தரையிறக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் மும்பை கடலுக்கு மேற்கே 60 கடல் மைல் தொலைவில் உள்ள சாகர் கிரண் என்ற எண்ணெய் கிணறு அருகே அவசரமாக தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலின் பேரில், கடலோர காவல்படை கப்பல் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: என்றுமே தரையிறங்காத விமான ஹோட்டல்

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட மும்பையில் இருந்து மற்றொரு கப்பல் அனுப்பப்பட்டது. கடலோர காவல்படை விமானம் லைப் ஜாக்கெட்டுகளை கடலில் வீசியது. 

முன்னதாக, ஹெலிகாப்டர்  கடலில் அவசரமாக தரையிறங்கியவுடன் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் ஒன்பது பேரில் ஆறு பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் மற்றவர்களை பாதுகாப்பாக கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக ஓஎன்ஜிசி ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிவித்த ஓஎன்ஜிசி ட்விட்டரில், "மும்பை ஹையில் ஓஎன்ஜி என்னேய் கிணறு சாகர் கிரண் அருகே அரபிக்கடலில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 7 பயணிகள் மற்றும் 2 விமானிகள் பயணம் செய்தனர். நான்கு பேர் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன." என பதிவிட்டுள்ளது.

அவசரமாக தரையிறங்குவதற்கான சூழ்நிலைகள் தொடர்பாக உடனடியாகத் தெரியவில்லை. அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் மர்மமான புதிய துருவச் சுடர் விஞ்ஞானிகள் கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQ

 

 

Trending News