பழைய ரூ500, ரூ1000 வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது

Last Updated : Dec 29, 2016, 06:57 PM IST
பழைய ரூ500, ரூ1000 வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு மேல் வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது என மத்திய அரசு அறிவிப்பு

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு மேல் வைத்திருந்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதாவது சிறை தண்டனை கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் ரூ 10000 அபராதம் விதிக்கப்படும்.

கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ 500 மற்றும் ரூ 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது. புதிதாக ரூ 2000 மற்றும் ரூ 500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பர்கள் டிசம்பர். 31-ம்தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் பிறகு ரிசர்வ் வங்கியில் மட்டுமே மார்ச் 31-ம் தேதி வரை டெபாசிட் செய்ய முடியும் என அறிவித்தது.

இந்த சூழ்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை ஒரு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு அதற்கு அதிகமாக யாராவது பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகளை வைத்து இருந்தால் கிரிமினல் குற்றமாக கருதப்படும். அவர்களுக்கு அபராதம் மற்றும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

இன்று அந்த அவசர சட்டத்தில் ஒரு மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு  பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகளை வைத்து இருந்தால் சிறை தண்டனை கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என திருத்தம் கொண்டு வந்து உள்ளது.

இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு அவரச சட்டம் அமலுக்கு வரும் என தெரிகிறது.

More Stories

Trending News