மீண்டும் பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்!!

Last Updated : Jul 19, 2017, 09:07 AM IST
மீண்டும் பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்!! title=

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பாகிஸ்தானில் விதிக்கப்பட்டிருந்த தடையை, லாகூர் சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்து உத்தரவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்தே காணப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து, தடையை நீக்க வேண்டுமென லாகூர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சமீபத்தில் இந்த வழக்கு லாகூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி மன்சூர் அலி ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ‘இந்திய டிவி தொலைக்காட்சி நாடகங்கள் என எதிலாவது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகளோ, முறையில்லாத படக்காட்சிகளோ இருந்தால், அதை மட்டும் தணிக்கைசெய்து வெளியிடலாம். இதற்காக ஒட்டுமொத்த இந்திய டிவி நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென்ற அவசியமில்லை’ என்றார்.

Trending News