வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்!

தனது தாயுடன் வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிறுமியை வயல் பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த 8 பேர்.....

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Oct 29, 2018, 02:14 PM IST
வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்!
Representational Image

தனது தாயுடன் வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிறுமியை வயல் பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த 8 பேர்.....

பானிபட்: ஹரியானாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இரவில் தனது வீட்டில் 17 வயதுடைய சிறுமி தூங்கிகொண்டிருக்கையில் அவரை வீட்டுக்கு வெளியே எட்டு நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.  

ஹரியானா மாநிலம் பானபாட்டின் சோனோலி என்ற பகுதியில் 17 வயதான மைனர் சிறுமி இரவு நேரத்தில் அவரது வீட்டிலிருந்து வயல்வெளியில் இழுத்துச் சென்று எட்டு நபர்களால் கூட்டுபலாத்காரம் செய்துள்ளனர். 

இரவு நேரம் உணவுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மூன்று சகோதரிகளும் அம்மாவும் சேர்ந்து வீட்டிற்குள் தூங்கினார்கள். அதில், பாதிக்கப்பட்ட சிறுமி மட்டும் தனியறையில் உறங்கியுள்ளார். 

இதையடுத்து சுமார் 11 மணியளவில் ஹசிம் மற்றும் இஷார் ஆகிய இரண்டு பெரும் வீட்டின் ஆறு அடி சுற்றுச்சுவற்றில் ஏறினர் மற்றும் சிறிய தூங்குகின்ற அறையில் நுழைந்தனர். பின்னர், அந்த சிறுமி தூங்கிக்கொண்டிருந்த அறையில் நுழைந்தனர்.

இதையடுத்து, அந்த சிறுமியை வீட்டை விட்டு வயல் பகுதிக்கு இழுத்து சென்று அவளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார். சிறுமியை கற்பழிக்க மேலும் ஆறு ஆண்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அந்த சிறுமியை அந்த எட்டு நபர்களும் சுமார் இரண்டுமணிநேரம் கூட்டுபலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினால் கொண்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை, அந்த சிறுமி தைரியமாக தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தை அணுகியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.