அதிகரிக்ககூடும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை....

கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் ஒபெக் இந்த வாரம் சந்திக்க உள்ளது.

Last Updated : Jun 3, 2020, 12:03 PM IST
அதிகரிக்ககூடும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை....

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரலாம்! இதன் காரணமாக, 1 லிட்டர் பெட்ரோல் விலையில் ஏற்றம் இருக்கும்.   கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் ஒபெக்  இந்த வாரம்  ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.  இருப்பினும்,முன்னதாகவே  ஒபெக்  ஜூன் 9 அன்று ஒரு கூட்டம் நடத்த  திட்டமிட்டிருந்தது.

வரவிருக்கும் நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மிகப்பெரிய அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டரை மாதங்களாக,  ஊரடங்கு நிலவியதால்  பெட்ரோல் விலை நிலையாக இருந்தது. இருப்பினும்  கூட  சில மாநிலங்கள் பெட்ரோல் வருமானத்திற்கான  வாட் வரியை  அதிகரித்துள்ளன. ஆனால், இப்போது தொடர்ந்து எண்ணெய் விலை அதிகரித்து வருவதை காண முடிகிறது. இதை பொருத்தே வரும் நாட்களில்  ஒபெக் ஒரு  முடிவு எடுக்கும்.

READ | UP அரசின் வருவாயை உயர்த்த பெட்ரோல், டீசல், மது விலையை உயர்த்த திட்டம்...

ஒபெக் ஏற்கனவே ஜூன் 9 அன்று கூட்டம் நடத்தி முடிவு எடுக்க திட்டமிட்டிருந்தாலும்,   குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே கூட  கூட்டம் நடத்தப்படலாம் என்று சில வட்டாரங்கள் கூறி  வருகின்றன.  முக்கிய  கச்சா எண்ணெய் விலை. உண்மையில், அடுத்த சில மாதங்களுக்கு உற்பத்தி வெட்டுக்கள் குறித்து ஒபெக் முடிவு செய்யலாம். இது நடந்தால், கச்சா எண்ணெயின் விலை வலுவாக இருப்பதைக் காணலாம்.

கூட்டத்தில் உற்பத்தி வெட்டு பற்றிய செய்தி  எண்ணெயின் விலையில்  உயர்வை ஏற்படுத்தியது.  ப்ரெண்ட் கச்சா என்ணை  விற்பனை  சுமார் 1 சதவீதம் லாபம் கண்டது.  மேலும்  ப்ரெண்ட் கச்சா எண்ணை   விலை கடந்த 6 வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இருப்பினும், ப்ரெண்ட் மற்றும் டபிள்யூ.டி.ஐ கச்சாவின் விலை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 40 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தியைக் குறைக்கும் முடிவு  எடுக்கப்பட்டதால்  அது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

READ | தமிழகத்தில் பெட்ரோல் பங்க் செயல்படும் நேரம் நீட்டிப்பு: தமிழக அரசு!!

இந்தியா தனது கச்சா எண்ணெயில் 83 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.  இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் செலவிடப் படுகிறது.  ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால்  இந்தியாவின் இறக்குமதி விலை அதிகரிக்கக்கூடும். எனவே அதை சரிக்கட்ட அரசாங்கம் வரி விகிதங்களை அதிகமாக  விதித்துள்ளது.

உற்பத்தி வெட்டுக்களின் காலம் நீட்டிக்கபடக் கூடும்.

ஒபெக் மற்றும் அதன் கூட்டணி அமைபுகள்  ஜூன் 9 அன்று காணொலி கூட்டம் மூலம் உரையாட  உள்ளனர். அதன் பிறகு , ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி வெட்டுகள்  தொடரப்படலாம். ஏப்ரல் 1 ஆம் தேதி, ஒபெக் மற்றும் அதனுடன் இணைந்த நாடுகள் ஜூன் 30 வரையிலான கால கட்டத்தில்  தினமும் 97 மில்லியன் பீப்பாய் அளவு  கச்சா எண்ணை  உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்தன.  இது இதுவரை உற்பத்தியில் நிலவி இருக்காத ஒரு  மிகப்பெரிய வெட்டு ஆகும். மேலும், இது உலகின் மொத்த கச்சா உற்பத்தியில் 10 சதவீதமாகும். எனவேதான்  கடந்த சில நாட்களாக கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விலைகள் உயரக்கூடும்

கடந்த 6 வாரங்களில் ப்ரெண்ட் கச்சா என்ணை விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. உண்மையில், ஒபெக் நாடுகளும், அதனுடன் இணைந்துள்ள   ரஷ்யா போன்ற நாடுகளும் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து கொண்டுள்ளதால்  கச்சா விலைக்கு ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் குறைக்க முடிவு செய்தால், கச்சா எண்ணை விலை  44$ வரை உயரக் கூடும்.  இது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று   நிபுணர்கள் கருதுகிறார்கள்.  

பெட்ரோல் விலை பல விஷயங்களை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய்தான்  அதில் முதலிடம் வகிக்கிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரிப்பதால்  இந்தியாவிலும்  பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் நிலவுகிறது.  இருப்பினும், கச்சா எண்ணை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிக மாற்றம் இருக்காது. ஏனென்றால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதற்கு மற்றுமொரு  காரணம் டாலருக்கு எதிரான ரூபாயின்  விலை வீழ்ச்சியும்தான். தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூ .19.98  ஆக உள்ளது மேலும் 15.25 VAT ஆக வசூலிக்கப்படுகிறது

 
(மொழிபெயர்ப்பு – வானதி கிரிராஜ்)

More Stories

Trending News