பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு: அதிகாரபூர்வ தகவல்

பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விபரங்களை, தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 27, 2021, 09:22 AM IST
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு: அதிகாரபூர்வ தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து மதிப்பு விபரங்களை, தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு 3.07 கோடி ரூபாயாக உள்ளது.

பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு (PM Narendra Modi) கடந்த ஆண்டு 2.85 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 22 லட்ச ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்த சொத்து மதிப்பு உயர்வுக்கு காரணம், குஜராத் மாநிலம் காந்தி நகரிலுள்ள எஸ்பிஐ வங்கியில் அவர் வைத்திருக்கும் வைப்புத் தொகை கடந்தாண்டு ரூ.1.6 கோடியில் இருந்து ரூ.1.86 கோடியாக அதிகரித்ததுதான்.

ALSO READ | Quad மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்க பயணம்

சமீபத்தில் சொத்து மதிப்பு தரவுகளின்படி, அவருடைய வங்கிக் கணக்கில் 1.5 லட்ச ரூபாயும், ரொக்க கையிருப்பாக 36,000 ரூபாயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை முதலீடு அல்லது மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யவில்லை; அவற்றிற்கு பதிலாக தேசிய சேமிப்பு திட்டத்தில் 8.93 லட்ச ரூபாயும், இன்சூரன்ஸ் பாலிசிகளில் 1.50 லட்ச ரூபாயும், எல் அண்ட் டி இன்பிரா பாண்ட்களிலும் முதலீடு செய்துள்ளார். இவருக்கு ரூ. 1.48 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. அசையும் சொத்துக்களின் மதிப்பு 1.97 கோடி ரூபாயாக உள்ளது. தனது பெயரில் எந்த வாகனமும் வைத்துக்கொள்ளவில்லை. எவரிடமும் எந்த கடனும் வாங்கவில்லை.

காந்திநகரில் செக்டார்-1ல் 401/ஏ என்ற முகவரியில் வீட்டுமனை உள்ளது. இதிலும், 25 சதவீதம் மட்டுமே மோடிக்கு சொந்தமானதாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர், நிலம் வாங்குவதில் அவர் எந்த முதலீடும் செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ | SCO Summit 2021: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் உதவ விரும்புகிறோம்: பிரதமர் மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News