பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து கொண்ட பின்னர் நேற்று இரவு தனிவிமானத்தில் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்றார். இரவில் அங்கேயே தங்கி ஓய்வெடுத்த பிரதமர் மோடி இன்று பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஜங்கிள் சபாரி சென்றார். தலையில் கருப்பு நிற தொப்பி அணிந்திருந்த பிரதமர் மோடி முற்றிலும் மாறுபட்ட ஜங்கிள் சவாரி செய்யும் போது அணியும் வனத்துறையினர் உடை அணிந்து ஜீப்பில் 20 கிலோமீட்டர் சவாரி செய்து பார்வையிட்டார். சாம்ராஜ் நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு அருகே யானைகள் முகாமும் உள்ள நிலையில், தெப்பக்காடு யானைகள் முகாமில் பிரதமர் நரேந்திர மோடி வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார்.
தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் யானைப் பராமரிப்பாளர்களாக நடித்த ஜோடியான பொம்மன் மற்றும் பெள்ளி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்த ஜோடி பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை. தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர், தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மி மற்றும் ரகுவுடன் நேரத்தை செலவிட்டார். ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டிய அவர். டி 23 புலியை உயிருடன் பிடித்த வேட்டை தடுப்பு காவலர் பன்டனையும் பாராட்டினார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு புதிய செக் வைக்கும் மத்திய அரசு! பலே திட்டம்!
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி இன்று பந்திப்பூர், முதுமலை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வாகனம் மூலம் முதுமலை வந்தார். முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமுக்கு காலை 11.15 மணிக்கு வந்தார். முதுமலை வந்த பிரதமரை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், ஐஜி சுதாகர் எஸ்பி கி.பிரபாகர் ஆகியோர் வரவேற்றனர். மேலும், புலிகள் காப்பக திட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி வந்தார்.
மசினக்குடியில் அவரை காண பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருந்ததை கண்ட பிரதமர் மோடி வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களுக்கு கை அசைத்து வணங்கி காரில் புறப்பட்டு ஹெலிபேடுக்குச் சென்றார். காலை 11.15 மணிக்கு தெப்பக்காடு வந்த பிரதமர் நிகழ்ச்சிகளை முடித்து 11.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டு சென்றார்.
மேலும் படிக்க | எஸ்பிஐ வங்கி செய்த அதிரடி மாற்றங்கள்! இனி இந்த சேவைகள் இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ