தேர்தல் முடிவு: மக்களின் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் மோடி ட்வீட்...

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக கூறியுள்ளார்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2018, 11:02 AM IST
தேர்தல் முடிவு: மக்களின் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் மோடி ட்வீட்...  title=

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக கூறியுள்ளார்....

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கி விறு விருப்பாக நடைபெற்றது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் TRS கட்சியும் மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

இதி தொடர்ந்து, 5 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், ''மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள் என்று குறிப்பிட்டுள்ள மோடி, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த 3 மாநிலங்களில் இருந்த பாஜக அரசு ஓய்வின்றி உழைத்தது'' என்று கூறியள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய பிரதேசத்தில் கடந்த 23 மணிநேரமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 116 தொகுதிகள் வேண்டும். காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜகா 109 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் இரண்டு இடங்கள் தேவை என்கின்ற நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்றும் தேவைப்பட்டால் ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு தரும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News