பிரதமர் மோடியின் பிறந்தநாள் சிறப்பு பரிசு!

Updated: Sep 18, 2017, 12:04 PM IST
பிரதமர் மோடியின்  பிறந்தநாள் சிறப்பு பரிசு!
Representational image (File pic)

பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாள் பரிசாக ராயலசீமா விவசாயிகள் 68 பைசாவிற்கு காசோலை பரிசளித்தனர்.

ஐதிராபாத் ராயலசீமா பகுதியை சேர்ந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையினில் 68 பைசாவிற்கு காசோலை அனுப்பி வைத்துள்ளனர்.

ராயலசீமா சகுநீதி சாதனா சமிதி(RSSS), ராயல்சீமா வறட்சி-பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனுக்காக பணிபுரியும் ஒரு இலாப நோக்கற்ற குழு, பிரதமருக்கு 68 பைசா மதிப்புடைய 400 காசோலைகளை அனுப்பியுள்ளனர்.

கர்னூல், கடப்பா, அனந்தபூர் மற்றும் சித்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் கடுமையான வரட்சி நிலையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச்செல்ல இந்த முயற்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.