புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கிரிக்கெட் கிளப்பில் உள்ள பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் புகைப்படம் மறைக்கப்பட்டது.
கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பிசிசிஐ-யின் அங்கமான இந்திய கிரிக்கெட் கிளப்பில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உருவப்படத்தை மூடியுள்ளது. கிளப்பின் உணவகத்தில் அவரது உருவப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரின் படம் நிரந்தரமாக அங்கிருந்து நீக்கப்படுமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் க்ளப் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.