போதை மருந்து விவகாரம்: மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்த நடிகை!!

போதைப் பொருள் பயன்பாடு குறித்து அறிவதற்காக எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற முயற்சித்த நடிகையின் நாடகம் அம்பலமானது..!

Last Updated : Sep 12, 2020, 01:23 PM IST
போதை மருந்து விவகாரம்: மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்த நடிகை!! title=

போதைப் பொருள் பயன்பாடு குறித்து அறிவதற்காக எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற முயற்சித்த நடிகையின் நாடகம் அம்பலமானது..!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் (Sushant Singh Rajput) மரணத்தில் முக்கிய குற்றவாளியான ரியா சக்ரவர்த்தி (Rhea Chakraborty) மும்பையின் பைகுல்லா சிறையில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் பெறுவதற்காக தான் போதைப்பொருள் எடுப்பதில்லை என்று ரியா சக்ரவர்த்தி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சட்டவிரோத போதைப் பொருள் சப்ளை விவகாரத்தில் நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள, அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இருவரும் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ | ரியா போதை மருந்து வழக்கு விசாரணையில் 5 பிரபலங்களின் பெயர் அம்பலம்!!

இதனிடையே, நீதிமன்ற ஆணைப்படி, நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பெங்களூரூ கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவை காண்பித்த பிறகு, அமைதியாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மற்றொரு நடிகையான ராகினி திவேதியிடம் சிறுநீர் மாதிரி பெறப்பட்டது. அப்போது, அவர் தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து கொடுத்துள்ளார். இதையறிந்த மருத்துவர்கள், அவரை கே.சி. பொது மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு மீண்டும் அவரிடம் சிறுநீர் மாதிரி எடுக்கப்பட்டது. ராகினியின் நடத்தை வெட்கக்கேடானது எனக் குறிப்பிட்ட விசாரணை அதிகாரி, போலீஸ் காவலை நீட்டிக்க கோரிய மனுவில், இந்த சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன்பேரில், மேலும் 3 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Trending News