பிரிவினைவாத நெருப்பை பற்றவைக்கும் ராகுல் காந்தி: ஸ்மிருதி இரானி!

பிரிவினைவாதத்தின் நெருப்பைப் பற்றவைக்கும் ராகுல் காந்தியை பாகிஸ்தானை அதிகமாக நேசிக்கிறது என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Aug 29, 2019, 08:29 AM IST
பிரிவினைவாத நெருப்பை பற்றவைக்கும் ராகுல் காந்தி: ஸ்மிருதி இரானி! title=

பிரிவினைவாதத்தின் நெருப்பைப் பற்றவைக்கும் ராகுல் காந்தியை பாகிஸ்தானை அதிகமாக நேசிக்கிறது என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பல அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு விவகாரம், அங்கு நடக்கும் வன்முறைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியை பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது என ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள தமது சொந்த மக்களவைத் தொகுதியான அமேதியில் ஸ்மிருதி இராணி புதன்கிழமை சுற்றுப்பயணம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்;
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை முன்வைத்து, ஐ.நா. சபையில் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. தனது வாதத்துக்கு ராகுல் காந்தியிடம் இருந்து பாகிஸ்தான் ஆதரவு பெறுவது இது முதல்முறை அல்ல என அவர் கூறினார். 

மேலும், தேசியக் கொடியை மதிப்புக் குறைவாக கருதுபவரும், எதிரி நாட்டால் விரும்பப்படுபவருமான ஒருவர் இந்தியாவில் தலைவராக இருப்பது நமது நாட்டின் துரதிருஷ்டம். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பான தீர்மானம், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுமைக்கும் ஒரே தேசியக் கொடி, ஒரே அரசியலமைப்புச் சட்டம் குறித்து பேசினார். அப்போது சில காங்கிரஸ் MP-க்கள் தெரிவித்த கருத்துகள், நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராகுல் காந்தியின் உத்தரவு, சமிஞ்ஞை அடிப்படையிலேயே அவர்கள் இவ்வாறு பேசினர். இது இந்தியாவை பிரிக்கும் காங்கிரஸ் கட்சியின் மனோபாவத்தை பிரதிபலிக்கிறது.

ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகும். அப்பகுதிகளில் வாழும் மக்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ், ஒவ்வொரு வீட்டையும் வளர்ச்சிப் பணி சென்றடைய வேண்டும் என விரும்புகின்றனர். பிரிவினைவாதம் எனும் தீயை ராகுல் காந்தி பற்ற வைக்காமல் இருந்தால், அது நாட்டுக்கு நன்மையை தரும். அமேதியில் 72 அங்கன்வாடி மையங்களை மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்துள்ளேன். ராகுல் காந்தியின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில், இதற்கு முன்பு இவ்வாறு நடைபெற்றது கிடையாது என அவர் தெரிவித்தார். 

 

Trending News