மத்திய பிரதேசம் மான்ட்சாரில் 6 விவசாயிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தைப் பார்வையிட போலீசார் தடையை மீறி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று மோட்டார் சைக்கிளில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கான மான்ட்சார் என்ற இடத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் பலியாகினர்.
இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று மான்ட்சாருக்கு நேரில் சென்றார். ஆனால் போலீசார் ராகுலுக்கு அனுமதி அளிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து போலீசாருடன் ராகுல் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் தடையை மீறி ராகுல் காந்தி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லப்பட்டார். ராகுல் சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் ஓடிப் போய் தடுக்க, ராகுலின் பாதுகாவலர்கள் போலீஸை மறிக்க அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#WATCH Congress VP Rahul Gandhi travels by road on a motorcycle to Madhya Pradesh’s #Mandsaur pic.twitter.com/CWoUq0zpWS
— ANI (@ANI_news) June 8, 2017