காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது புதியதோர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்!
நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இப்தார் விருந்து நடத்தப்பட்டது. இந்த விருந்தில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெறும் 10 நொடிகள் மட்டுமே இஸ்லாமிய நோம்பு தொப்பியை அணிந்தார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமிய சகோதரர் ஒருவர், ராகுல் காந்திக்கு தலையில் தொப்பியை அணிவிக்கின்றார், அதனை வெறும் 10 நொடியில் தலையில் இருந்து ராகுல் அகற்றுகின்றார். இந்த முழுகாட்சியும் வீடியோ காமிராவில் பதிவாகியுள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காக கட்சி தலைவர்கள் தற்போது ரமலான் நோம்பில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் விருந்து அளித்து வருகின்றனர். அந்த வகையில் தான் காங்கிரஸும் விருந்து அளித்துள்ளது. ஆனால் பாஜக இஸ்லாமியர்களின் இறையாண்மையினை போற்றும் வகையில் கொடுக்கின்றது என தெரிவித்து பாஜக அமைச்சர் முக்த்தர் அப்பாஸ் நகுவி தெரிவித்துள்ளார்.
PM Shri @narendramodi Ji‘s Govt has made Muslim women an equal partner of development of the country & has taken several major reformist decisions to protect their social-constitutional & economic rights. #Iftaar pic.twitter.com/wOL1nSuto1
— Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) June 13, 2018
காங்கிரஸ் தலைவரகா ராகுல் காந்தி பதவியேற்றதற்கு பின்னர் அவர் பங்கேற்கும் முதல் இப்தார் விருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருந்தில் முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரத்திபா பாட்டில், ஹமித் அன்சாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Good food, friendly faces and great conversation make for a memorable Iftar! We were honoured to have two former Presidents, Pranab Da & Smt Pratibha Patil ji join us, along with leaders from different political parties, the media, diplomats and many old & new friends. pic.twitter.com/TM0AfORXQa
— Rahul Gandhi (@RahulGandhi) June 13, 2018
டெல்லி நட்சத்திர விடுதியில் நடைப்பெற்ற இந்த விருந்தில் காங்கிரஸ் முக்கிய உறுப்பினர்கள் ரந்தீப் சிங், ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், நடிகை நபிஷா அலி ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
எனினும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. அவர் உடல்நல குறித்த வழக்கமான சோதனைக்காக வெளிநாடு சென்றிருப்பதால் இந்த விருந்தில் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.