டெல்லி அதிகாலை கொட்டித்தீர்த்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலம் குர்கானில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருவதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Aug 28, 2018, 10:31 AM IST
டெல்லி அதிகாலை கொட்டித்தீர்த்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலம் குர்கானில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருவதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய மழையின் வேகம் படிப்படியாக அதிகரித்ததையடுத்து டெல்லி சாலைகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. காலை நேரத்தில் அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக் குவிந்தவர்கள் வெள்ளம் காரணமாக வேகமாகச் செல்ல முடியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

இதேபோன்று ஹரியானா மாநிலம் குர்கானிலும் கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

More Stories

Trending News