ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற காங்கிரஸ்!

ராஜஸ்தானில் மீண்டும் கை ஓங்கியது. இன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஹ்லோட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. 

Last Updated : Aug 14, 2020, 05:04 PM IST
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற காங்கிரஸ்! title=

ஜெய்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் கை ஓங்கியது. இன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஹ்லோட் தலைமையிலான காங்கிரஸ் (Congress) கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான் அரசு இன்று, நம்பிக்கை வாக்கெடுப்பை (Rajasthan floor test) சட்டமன்றத்தில் நடத்தியது. மத்தியப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவாவில் உள்ள அரசாங்கங்களை பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி "கவிழ்க்க" முயற்சித்ததாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் சாந்தி தரிவால் குற்றம் சாட்டினார், ஆனால் ராஜஸ்தானிலும் இதேபோன்ற முயற்சி இருந்தும் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறினார். 

அசோக் கெஹ்லோட் (Ashok Gehlot) தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் குரல் வாக்கு மூலம் நம்பிக்கை தீர்மானத்தை வென்றது. அதன் பின்னர் சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சட்டமன்ற சபாநாயகர் சி.பி.ஜோஷி தெரிவித்தார். 200 பேர் கொண்ட சபையில், காங்கிரஸ் கட்சியில் 107 எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் மற்றும் நட்பு கட்சியின் ஆதரவு உள்ளது. பாஜகவில் 72 உறுப்பினர்கள் உள்ளனர்.

ALSO READ |  அனைத்தையும் மறக்கலாம், திரும்பி வாருங்கள்... ப.சிதம்பரம் சச்சின் பைலட்டிற்கு அறிவுரை

முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் (Sachin Pilot) பேசுகையில், "அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ராஜஸ்தான் சட்டமன்றத்தில் மிகச் சிறந்த பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பல்வேறு முயற்சிகள் இருந்தபோதிலும், எங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு இருந்தது.

ALSO READ |  நான் BJP-யில் இணைய மாட்டேன் - சச்சின் பைலட் திட்டவட்டம்..!

முதல்வர் அசோக் கெஹ்லோட் சட்டசபை கூட்டத்தின்போது "உண்மையின் வெற்றி" என்று கூறினார். "சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகையில், இது ராஜஸ்தான் மக்களின் வெற்றியாகவும், எங்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமையாகவும் இருக்கும், இது உண்மையின் வெற்றியாக இருக்கும்: சத்தியமேவ் ஜெயதே" என்று அவர் ட்வீட் செய்திருந்தார். 

Trending News