மத்திய நிதித்துறை செயலாளராக ராஜிவ் குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது!
ராஜீவ் குமார் நிதி அமைச்சின் புதிய செயலாளராக செவ்வாய்க்கிழமை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜார்கண்ட் கேடரைச் சேர்ந்த 1984 தொகுதி IAS அதிகாரியான ராஜீவ் குமார், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் திணைக்களத்தின் (DFS) செயலாளராக பணியாற்றி வந்தார்.
இப்பொறுப்பில் இருந்த சுபாஷ் சந்திர கார்க் அண்மையில் எரிசக்தித்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், காலியாக உள்ள நிதித்துறை செயலாளர் பதவிக்கு ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Rajiv Kumar, Secretary in Department of Financial Services at Ministry of Finance has been appointed as the Finance Secretary. pic.twitter.com/yE0FwrN1z9
— ANI (@ANI) July 30, 2019
இதற்குமுன் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், மின்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட வங்கி சீர்திருத்தப் பணிகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.