சிங்கப்பூர் சென்ற ராஜ்நாத் சிங், நேதாஜி-க்கு மலர் அஞ்சலி செலுத்தினார்...

சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய இராணுவ நினைவு மார்கத்தில் இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர போராளியான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.

Last Updated : Nov 19, 2019, 06:01 PM IST
சிங்கப்பூர் சென்ற ராஜ்நாத் சிங், நேதாஜி-க்கு மலர் அஞ்சலி செலுத்தினார்...

சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய இராணுவ நினைவு மார்கத்தில் இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர போராளியான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய இராணுவ நினைவு மார்கத்தில் இன்று இந்தியாவின் தலைசிறந்த தலைவரும் சிறந்த சுதந்திர போராளியுமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் INA தியாகிகளுக்கு, அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

பேங்காங்கின் பயணத்தை முடித்து திங்களன்று இரவு சிங்கப்பூர் சென்ற ராஜ்நாத் சிங், இந்திய-சிங்கப்பூர் பாதுகாப்பு துறை அமைச்சர்களின் சந்திப்பில் பங்கேற்கின்றார்.

இதனிடையே  சிங்கப்பூரில் INA மார்க்கரில் நடைப்பெற்ற, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவின் போது ராஜ்நாத் சிங் மேஜர் ஈஸ்வர் லாலை சந்தித்தார். மேஜர் லால் நேதாஜி சுபாஷ் சந்திரா தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றினார்.

இதனிடையே, சிங்கப்பூரில் உள்ள தேசிய ராணுவ நினைவுச்சின்னத்தில் என்.சி.சி கேடட்களுடன் ராஜ்நாத்சிங் உரையாடினார்.

முன்னதாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் சந்திப்புக்காக தாய்லாந்து சென்றார். இந்த சந்திப்பின் போது அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டாக்டர் மார்க் டி எஸ்பருடன் சிங் ஒரு சிறப்பு சந்திப்பினை நடத்தினார். 

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மக்கள்-மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பினருக்கும் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

More Stories

Trending News