ரபேல் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’; பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்!

இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள ரபேல் போர் விமானங்களை முறைப்படி பெறுவதற்கு முன்னதாக, விமானங்களுக்கு ராஜ்நாத் சிங் தசரா தினத்தன்று அங்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Oct 6, 2019, 05:26 PM IST
ரபேல் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’; பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்! title=

இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள ரபேல் போர் விமானங்களை முறைப்படி பெறுவதற்கு முன்னதாக, விமானங்களுக்கு ராஜ்நாத் சிங் தசரா தினத்தன்று அங்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இரட்டை என்ஜின்கள் கொண்ட இந்த அதிநவீன போர் விமானங்கள் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில், ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அன்றைய தினம் முதல்கட்டமாக 4 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரான்சின் மெரிக்னாக் என்ற பகுதியில் நடைபெறவுள்ள ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி பதவுரியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் ராஜ்நாத் சிங், தசரா தினத்தன்று அங்கு 'ஷாஸ்திரா பூஜா’ எனப்படும் சிறப்பு ‘ஆயுத பூஜை’ செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னர் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது ஆண்டுதோறும் தசரா நாளில் இதுபோன்ற பூஜைகளை ராஜ்நாத் சிங் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராணுவ மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக பிரான்ஸ் நாட்டில் அவர் 'ஷாஸ்திரா பூஜா’ செய்யவுள்ளார் என பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read in English

Trending News