ரிலையன்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு: முகேஷ் அம்பானி

இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 12, 2019, 08:18 PM IST
ரிலையன்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு: முகேஷ் அம்பானி

மும்பை: சவுதி அரம்கோ நிறுவனம் எண்ணெய் மற்றும் ரசாயன வியாபாரத்தில் 75 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாகவும், அதன் 20 சதவீத பங்குகளை சவுதி அரம்கோவிற்கு விற்பனை செய்தல். அதாவது O2C வணிகத்தில் வைத்திருப்பதாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்துள்ளார்.

தொலைதொடர்பு துறையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய நிறுவனர் முகேஷ் அம்பானி, பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டார். 

கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது எண்ணெய் மற்றும் ரசாயன வியாபாரத்தில் 20 சதவீத பங்குகளை சவுதி எண்ணெய் நிறுவனமான அரம்கோவிற்கு சுமார் 15 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ. 1.06 லட்சம் கோடி) விற்கவும், எரிபொருள் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட பாதி பிரிட்டனின் பிபிக்கு(BP) ரூ.7,000 கோடிக்கு விற்கப்படும் என்று தெரிவித்தார்.

இது ரிலையன்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு" என்று அவர் கூறினார். "இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடுகளில் ஒன்றாகும்." எனவும் கூறினார். 

இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் சொத்துக்களையும், எரிபொருள் சில்லறை வணிகத்தில் நிறுவனம் வைத்திருக்கும் மீதமுள்ள பங்குகளையும் 49 சதவீதத்தை பிபிக்கு விற்ற பிறகு உள்ளடக்கியது என்று அவர் கூறினார். 

உலகின் மிகப்பெரிய கச்சா ஏற்றுமதி நிறுவனமான அரம்கோ, குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் இரட்டை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 7,00,000 பீப்பாய்கள் எண்ணெயை நீண்ட கால அடிப்படையில் வழங்குவதற்க்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என அம்பானி தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் சரியான விடாமுயற்சி, ஒழுங்குமுறை மற்றும் உறுதியான நம்பிக்கையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்றார்.