MET City: டெல்லி-என்சிஆர் அருகே கனவு நகரத்தை உருவாக்கும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி!

Mukesh Ambani Dream Project MET City: டெல்லி-என்சிஆர் அருகே கனவு நகரத்தை உருவாக்கும் ரிலையன்ஸ் முகே!ஷ் அம்பானி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2023, 11:38 PM IST
  • புதிய ரிலையன்ஸ் சிட்டி டெல்லி உருவாகிறது
  • டெல்லிக்கு அருகில் என்.சி.ஆர் பகுதிகளை இணைக்கும் ரிலையன்ஸ் சிட்டி
  • ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் புதிய கிரீன்ஃபீல்ட் நகரம்
MET City: டெல்லி-என்சிஆர் அருகே கனவு நகரத்தை உருவாக்கும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி! title=

உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, டெல்லி என்சிஆர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த நகரத்தை அமைக்கப் போகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான மாடல் எகனாமிக் டவுன்ஷிப் (Model Economic Township) இந்த நகரத்தை உருவாக்குகிறது.  ஹரியானாவின் ஜஜ்ஜரில் MET நகரம் கட்டப்படுகிறது. இதில் பல வகையான வசதிகள் செய்து தரப்படும்.

டெல்லி NCR இன் பெரிய பொருளாதாரத் துறையான குர்கானுக்கு அருகில் இந்த நகரம் உருவாகிறது. இந்த நகரம் ’பசுமையான நகரம்’ (greenfield city) என்ற வகையில் உருவாக்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த ஸ்மார்ட் சிட்டி 8,000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. இந்த நகரத்திற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தொடர்பான தகவல்கள் பிரம்மிக்க வைக்கின்றன.

220 KV மின் துணை நிலையம், நீர் வழங்கல் நெட்வொர்க் மற்றும் சுத்திகரிப்பு நிலையம், தராமான சாலைகளின் நெட்வொர்க் என ஒரு சிறந்த நகரமாக இந்த புதிய நகரம் உருவாக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்தது - முழு விவரம்

ஜப்பானிய நிறுவனங்ககளின் பங்களிப்பு

நிஹான் கோஹென், பானாசோனிக், டென்சோ மற்றும் டி-சுசுகி போன்ற ஜப்பானிய ஜாம்பவான்களைக் கொண்டிருக்கும் புதிய ரிலையன்ஸ் ஸ்மார்ட் சிட்டியை 4 ஜப்பானிய நிறுவனங்களின் புதிய வீடு என்றும் அழைக்கலாம். நிஹான் கோஹனின் உற்பத்தி அலகு இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி அலகு ஆகும். MET நகரம் ஜப்பானிய தொழில்துறை நகரமாகும்.

நிறுவனம் 400க்கும் மேற்பட்ட தொழில்துறை வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. வட இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிரீன்ஃபீல்ட் ஸ்மார்ட் சிட்டிகளில் ஒன்றிற்காக நிறுவனத்தால் மாஸ்டர்பிளான் தயாரிக்கப்பட்டது என்று, இந்த திட்டம் குறித்து, மெட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வி.கோயல் கூறுகிறார்.

மேலும் படிக்க - பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா... பெட்ரோலிய துறை அமைச்சர் கூறுவது என்ன

ஸ்மார்ட் சிட்டியில் கிடைக்கும் வசதிகள்

புதிய ரிலையன்ஸ் சிட்டி டெல்லி, குருகிராம், நொய்டா மற்றும் துறையின் பிற நகரங்களுக்கு சிறந்த இணைப்பைக் கொண்டிருக்கும். இந்த நகரம் குண்ட்லி மனேசர் பல்வால் (KMP) விரைவுச்சாலை மற்றும் புது தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

MET சிட்டி வலைத்தளத்தின்படி, இலவச நிலம் உடனடி வளர்ச்சிக்கு முற்றிலும் தயாராக உள்ளது. மறுபுறம், கல்விக்கு தேவையான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் அமைக்கப்படுகின்றன.

பள்ளிகளைப் பற்றி பேசினால், SGT பல்கலைக்கழகம் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் கல்வி வளாகம் ஆகியவை ரிலையன்ஸ் ஸ்மார்ட் சிட்டி நகரத்திற்கு மிக அருகில் உள்ளது. மருத்துவ வசதிகளுக்கும் முகேஷ் அம்பானியின் கனவு நகரத்தில் பஞ்சமில்லை.

மேலும் படிக்க | GlobalBees: 7 மாதங்களில் தொழிலில் அசுர வளர்ச்சி பெற்ற நிதின் அகர்வால் யார் தெரியுமா?

கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய சிண்டிகேட் கடன் வாங்கியவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து இரண்டு தவணைகளில் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு நாணயக் கடனாக வாங்கியுள்ளது. சிண்டிகேட் கடன் என்பது வங்கிகள் / நிதி நிறுவனங்களின் குழுமத்தில் இருந்து வாங்கப்படும் கடன் ஆகும்.

கார்ப்பரேட் சிண்டிகேட் கடன்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் அதன் டெலிகாம் யூனிட் ஜியோ இன்ஃபோகாம் ஆகியவை இந்த மிகப்பெரிய சிண்டிகேட் கடன்களைப் பெற்றுள்ளன. கார்ப்பரேட் வரலாற்றில் இது மிகப்பெரிய சிண்டிகேட் கடன் என்று அழைக்கப்படுகிறது. 

மேலும் படிக்க - இரட்டை அதிர்ச்சி: 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு; உற்பத்தி குறைந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News