ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்!! படிப்படியாக குறைக்க முயற்ச்சி

தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக புழக்கத்தில் இருந்து குறைக்கவே இந்த நடவடிக்கை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2019, 11:36 AM IST
ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்!! படிப்படியாக குறைக்க முயற்ச்சி

புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரங்களில் கடந்த சில மாதங்களாக ரூ. 2000 நோட்டுகளை ஏன் விநியோகிக்கவில்லை என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அதிக மதிப்புள்ள நோட்டுகளை படிப்படியாக புழக்கத்தில் இருந்து குறைக்கவே இந்த நடவடிக்கை எனக் கூற[கூறப்படுகிறது. இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை யாரும் எளிதில் மறக்க முடியாது. ஏனென்றால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிடுவதற்கு முன்பு மோடி தலைமையிலான மத்திய அரசு  கறுப்பு பணத்தை ஒழிக்க ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு பிறகு தான் ரூ. 2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டது. அந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதற்க்காகவே மக்கள் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். பிங்க் நிற கலரில் வெளியான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தற்போது அச்சிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

அதாவது நடப்பு நிகழாண்டில் (2019-2020) ஒரு ரூ. 2000 நோட்டுக்கள் கூட அச்சடிக்கப்படவில்லை. அது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, நடப்பு நிகழாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கள் கூட அச்சடிக்கப்படவில்லை என்றும், 2016-17 நிதியாண்டில் 3,542.991 மில்லியன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், 2017-2018 ஆம் நிதியாண்டில் சுமார் 111.507 மில்லியன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், கடந்த நிதியாண்டில் (2018-2019) சுமார் 4 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் அச்சிட்டதாகத் தெரிவித்துள்ளது.

More Stories

Trending News