கடந்த 2 வருடமாக 260 ஏக்கர் பூங்காவை கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டோர் அந்தப் பூங்காவை ஆக்கிரமித்திருந்தனர். இந்த பூங்கா ஜவகர்பாத் பகுதியில் உள்ளது. ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் கோர்ட்டு உத்தரவின் பெயரில் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அவர்களை வெறியேற்றுவதில் போலீசார் தோல்வி அடைந்தனர்.
இவர்கள் தங்களை சத்யாகிரஹிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். மேலும் இவர்கள் ஜெய் குருதேவ் என்ற மதப்பிரிவைச் சார்ந்தவர்கள். நேற்று அவர்களை அகற்ற போலீஸ் உதவியுடன்ஆக்கிரமித்தவர்களை வெளியேறுமாறு கூறியபோது கலவரம் வெடித்தது. அங்கு தங்கியிருந்தவர்கள் போலீசாரை தாக்கினர். இதையடுத்து போலீஸாரும் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இந்த மோதலில் 2 போலீசார் மற்றும் 12 ஆக்கிரமிப்பாளர்கள் உயிரிழந்து உள்ளனர். பல பேர் காயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலவரம் நடந்த பகுதியில் கையெறி குண்டுகள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்ததால் குடிசைகள் தீப்பிடித்து அந்த பகுதிகள் முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்படுகிறது.
உத்தரபிரதேச மாநில போலீஸ் தால்ஜித் சிங் சவுத்ரி செய்தியாளரிடம் பேசுகையில்:- ''நேற்று நடைபெற்ற மோதலில் 2 போலீசார் மற்றும் 12 ஆக்கிரமிப்பாளர்கள் உயிரிழந்து உள்ளனர். போலீசாரை தாக்கிய மற்றும் துப்பாக்கியால் சுட்ட ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் தெரியும். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்று கூறினார்.
தற்போது மதுராவில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களை காவல்துறை தேடிவருகிறது.
மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.