சைக்கிள் சின்னம்: அகிலேஷ், முலாயமுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!!

சமாஜ்வாதியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக நிரூபிக்க வேண்டும் என முலாயம்சிங் மற்றும் அகிலேசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Jan 5, 2017, 11:51 AM IST
சைக்கிள் சின்னம்: அகிலேஷ், முலாயமுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!! title=

புதுடெல்லி: சமாஜ்வாதியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக நிரூபிக்க வேண்டும் என முலாயம்சிங் மற்றும் அகிலேசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உ.பி.,யில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. கட்சியின் நிறுவன தலைவர் முலாயமிற்கும், அவரது மகன் அகிலேசுக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. 

அகிலேசும், அவரது சித்தப்பா ராம்கோபால் யாதவும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டினர். இதில் அகிலேஷ் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

மறுபுறம் முலாயம் சிங் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் சென்று சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என முறையிட்டார். 

இதையடுத்து அகிலேஷ் தரப்பில், ராம்கோபால் யாதவ் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இரு தரப்பினரையும் தங்களுக்கு உள்ள பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கட்சியில் உள்ள குழுக்கள், எம்.எல்.ஏ.,க்கள் , எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை கையெழுத்துடன் கூடிய அபிடவிட் மூலம் நிரூபிக்க வேண்டும். இரு தரப்பினரும் தங்களது பிரதிநிதியை ஜனவரி 9-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இரு தரப்பிற்கும் கடிதம் எழுதியுள்ளது.

Trending News