இனி வரதட்சணை கொடுமை புகார் அளித்தால் உடனடி கைது -HC அதிரடி!

வரதட்சணை கொடுமை என புகார் கொடுத்தால் இனி சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2018, 01:01 PM IST
இனி வரதட்சணை கொடுமை புகார் அளித்தால் உடனடி கைது -HC அதிரடி! title=

வரதட்சணை கொடுமை என புகார் கொடுத்தால் இனி சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...! 

வரதட்சணை கொடுமை குறித்து புகார் கொடுத்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கலாம், அவர்களை உடனடியாக கைது செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

வரதட்சணை கொடுமை புகார்கள் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், வரதட்சணை கொடுமை குறித்து பெண்கள் யாரேனும் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் உடனடியாக கைது செய்யலாம் என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். 

மேலும்,  புகார் அளிக்கும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் முன்ஜாமீன் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக 2017 ஜூலையில், பிரிவு 498A இன் 'தவறான பயன்பாடு' தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு நபரும் ஒரு ஆரம்ப விசாரணையின்றி கைது செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறி இருந்தது.

 

Trending News