நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி மாநகர் முழுவதும் தடபுடலாக நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை முன்னிலைப்படுத்தும் விதமாக ’அமிர்த் கால்’ திட்டங்கள் தொடர்பான செல்பி பாயிண்டுகள் 12 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய போர் நினைவுச்சின்னம், இந்தியா கேட், விஜய் சௌக், புது தில்லி ரயில் நிலையம், பிரகதி மைதானம், ராஜ் காட், ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையம், ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையம், டெல்லி கேட் மெட்ரோ நிலையம், ஐடிஓ மெட்ரோ கேட் ஆகிய இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுக்கலாம்.
மேலும் படிக்க | சுதந்திர தின விழா! 1,800 சிறப்பு விருந்தினர்கள்... வீடு தோறும் மூவர்ணக்கொடி... !
இந்த இடங்களில் குளோபல் ஹோப்: தடுப்பூசி மற்றும் யோகா, உஜ்வாலா யோஜனா, ஸ்பேஸ் பவர், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்வச் பாரத், சஷக்த் பாரத், நயா பாரத், பவர் இந்தியா ஆகிய திட்டங்கள் செல்ஃபி பாயிண்டுகளில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களும் சுதந்திர தின விழா செல்பி பாயிண்டுகளில் இடம்பெறும்.
ஆகஸ்ட் 15 முதல் 20 வரை 'MyGov' போர்ட்டலில் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஆன்லைன் செல்ஃபி போட்டியும் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிமக்கள் 12 இடங்களில் இருக்கும் செல்பி பாயிண்டுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் செல்ஃபி எடுத்து அவற்றை 'MyGov' போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு செல்பி பாயிண்டுகளில் இருந்தும் தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட இருக்கிறது.
சுதந்திர தினத்தன்று காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தைப் பின்பற்றி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையின் அரண்மனையிலிருந்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துகிறார். நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,800 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு தனது வழக்கமான உரையை ஆற்றுவார்.
மார்ச் 12, 2021 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டங்களின் முடிவை இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறிக்கும். மேலும் இது 'அமிர்த காலால்' அறிமுகப்படுத்தப்படும். 2047-ல் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும். இவை குறித்தும் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் பேச உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ