விரைவில் வருகிறது Covovax; SII ஆதர் பூனாவல்லாவின் முக்கிய அறிவிப்பு

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து "கோவோவேக்ஸ்" (Covovax) என்ற கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2021, 06:19 PM IST
  • இந்தியாவில் கோவோவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கிவிட்டது.
  • அமெரிக்காவின் நோவாவேக்ஸ் (Novavax) நிறுவனத்துடன் இணைந்து சீரம் மருந்து நிறுவனம் தயாரிக்கிறது.
  • பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் மருந்தைத் தயாரித்து, அது தற்போது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
விரைவில் வருகிறது Covovax; SII ஆதர் பூனாவல்லாவின் முக்கிய அறிவிப்பு title=

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (SII) தலைவர் ஆதர் பூனாவல்லா, தனது நிறுவனம் விரைவில் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் என கூறினார் . 

ஏற்கெனவே கொரோனா வைரஸுக்கு எதிரான கோவிஷீல்ட் (Covishield)  தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இரண்டாவது தயாரிக்கப்படும் தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து "கோவோவேக்ஸ்" (Covovax) என்ற கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடன் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து SII தயாரித்துள்ளது

பரிசோதனையில் உள்ள கோவோவேக்ஸ் (Covovax) என்ற தடுப்பூசி,  2021 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என முன்னதாக பூனாவல்லா கூறியிருந்த நிலையில், தற்போதும் செப்டம்பர் மாதம் Covovax தடுப்பூசி அறிமுகமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட கோவோவேக்ஸ் தடுப்பூசி  பரிசோதனையில்,  89.3% செயல்திறனை கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. சாதாரண கொரோனா வைரஸை எதிராக மட்டுமல்லாமல், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராகவும் கோவோவேக்ஸ் (Covovax) சிறப்பாகச் செயல்படுகிறது என்பது பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீரம் மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவல்லா இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் கோவோவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் (Novavax) நிறுவனத்துடன் இணைந்து சீரம் மருந்து நிறுவனம் தயாரிக்கிறது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 சீரம் மருந்து நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி இதுவாகும். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் மருந்தைத் தயாரித்து, அது தற்போது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. 

ALSO READ | மீண்டும் தீயாய் பரவுகிறதா கொரோனா; ஒரே நாளில் 59,118 பேருக்கு தொற்று
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News