நாட்டின் மிகப் பெரிய எட்டக் ஸ்டார்ட் அப் நிறுவனமான பைக் ஜூஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பை ஜூஸ் நிறுவனத்தை, பில்லியன் டாலர் நிறுவனமாக ஆக்கி, உச்சத்திற்கு கொண்டு சென்ற அதன் சிஇஓ ஆன ரவீந்திரன், நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடிகளில் புரண்ட பைஜூஸ் நிறுவனம், கடந்த சில மாதங்களாக, வருவாய் இழப்பு, ஊழியர்களின் பணி நீக்கம், கடன் சுமை, நிர்வாகக் குழு உறுப்பினர்களின் விலகல் என கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இயக்குனர்கள் குழுவை மாற்ற ஒப்புதல்
கடும் நெருக்கடிக்கு மத்தியில், பைஜூஸ் நிறுவனத்தின், நிர்வாக சீர்கேடுகள், மோசடி குற்றச்சாட்டுகள், வருமான இழப்பு ஆகியவற்றுக்கு தீர்வு காணும் பொருட்டு, பைஜூ ரவீந்திரனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவை மாற்றவும், பைஜூஸ் ரவிந்திரனின் மனைவியும், இணை நிறுவனமான திவ்யா கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரன் ரிஜி ரவீந்திரன் ஆகியோரை இயக்குனர்கள் குழுவில் இருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க | டெல்லிக்கே ராஜா என்றாலும் இங்கு பாஜக கூஜாதான் - கடம்பூர் ராஜு பேச்சு!
பைஜுஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி
பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆன்லைன் எட்டெக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட பை ஜூஸ் நிறுவனம், கொரோனா காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தது. இதனால் பணம் கோடிகளில் புரண்டது. இந்நிலையில், பைஜூஸ் நிறுவனம் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக மார்களை அடுத்து, ரவீந்திரனின் வீடு உட்பட நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில், கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, கடந்த 2011 முதல் 2023 வரை சுமார் ₹ 28,000 கொடிக்கும் அதிகமான அளவில் அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது தெரியவந்தது. மேலும் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில், சுமார் ₹ 9500 கோடியை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க பைஜூஸ் நிறுவனம் தவறியதை அடுத்து, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பைஜூஸ் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகள்
நிதி கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்ய தவறியது, கடனுக்கான வட்டி தொகையை செலுத்தாதது என பல வகையில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, பைஜூஸ் நிறுவனம் கடும் சவால்களை சந்திக்க தொடங்கியது. செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வாடகைக்கு கூட செலுத்த முடியாத நிலையில், பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்கள் பைஜூஸ் மீது தொடர்ந்த வழக்குகள்
மேலும் அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர், பைஜூஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தன. பல பில்லியன் டாலர்கள் அளவிலான கணக்கை பைஜூஸ் நிறுவனம் சரியாக கொடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தினர். மேலும் பைஜூஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த நெதர்லாந்து முதலீட்டு நிறுவனம், பைஜூஸ் நிறுவன வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை புறக்கணித்ததன் காரணமாக, போதுமான வளர்ச்சி அடையவில்லை என்ன குற்றம் சாட்டி, நிறுவனத்தின் மதிப்பை 22 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்து 5.1 பில்லியன் டாலராக குறைத்து மதிப்பிட்டது. இதுபோன்ற பிரச்சனைகளால் பைஜூஸின் முதலீட்டாளர்கள் பலர் விலகினர்.
நிறுவன ஊழியர்களுக்கு ரவீந்திரன் எழுதிய கடிதம்
பைஜூவின் பெரும்பாலான முதலீட்டாளர்கள் ரவீந்திரனை வெளியேற்ற வாக்களித்த ஒரு நாளுக்குப் பிறகு, நிறுவன ஊழியர்களுக்கு ரவீந்திரன் எழுதிய கடிதத்தில், இது பெரும் கேலிக்கூத்து என்றும் 170 பங்குதாரர்களில் 35 பேர் மட்டுமே, தன்னை வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ரத்த தானம்... தன்னார்வலர்களின் பெயரில் நடைபெறும் மெகா மோசடி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ