என் தந்தை மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார்: பிரணாப் மகள் ட்விட்!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது மகள் சார்மிஷ்டா முகர்ஜி கூறியுள்ளார்!  

Last Updated : Jun 11, 2018, 10:49 AM IST
என் தந்தை மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார்: பிரணாப் மகள் ட்விட்! title=

மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், பிரணாப் கலந்துக் கொண்டு பேசியது தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை ஆர்.எஸ்.எஸ். பரிந்துரைக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் ராவத் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரணாப்பின் மகள் சார்மிஷ்டா, நாட்டின் ஜனாதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பிறகு எனது தந்தை மீண்டும் தீவிர அரசியலுக்கு வர மாட்டார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியிடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மற்றும் அவரது மகள் ஷர்மிஸ்தா கருத்து கூறினர். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பாஜக பொய்யான செய்திகளை பரப்பும் அதற்கான வாய்ப்பை நீங்கள் அளிக்கிறீர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், பிரணாப் முகர்ஜி கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும். மதரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்திருந்தது குரிபிடத்தக்க்து

 

Trending News