மகாராஷ்டிரா தலைநகர் யாவத்மல் விதர்பா குடியிருப்பு என்ற பகுதிக்கு அருகே, சாலையின் கீழே பதிக்கப்பட்டிருந்த ராட்சத தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, சாலையில் பெரிய குழி ஏற்பட்டது. ராட்சத குழாய் வெடிப்பால் தண்ணீர் வேகமாக பொங்கிவந்த நிலையில், அதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியினர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்க அனுப்பிவைத்தனர். மேலும், இந்த வெடிப்பு குறித்து வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 40 வினாடிகள் உள்ள அந்த சிசிடிவி வீடியோவில், வெடிப்பு ஏற்பட்ட பகுதியில், சாலைக்கு மேலே எழுந்துவரும் தண்ணீரின் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இருச்சக்கர வாகனத்தில் அந்த பெண் வருவதும், சரியாக சாலையில் வெடிப்பு ஏற்படுவதும் ஒரே நேரத்தில் நடக்கிறது என்பதை அந்த சிசிடிவி வீடியோ உறுதிசெய்தது.
#WATCH | Road cracked open after an underground pipeline burst in Yavatmal, Maharashtra earlier today. The incident was captured on CCTV. A woman riding on scooty was injured. pic.twitter.com/8tl86xgFhc
— ANI (@ANI) March 4, 2023
"நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, நிலத்தடி குழாய் வெடித்ததால், தண்ணீரின் அதிக அழுத்தத்தால் சாலை விரிசல் அடைந்ததைக் கண்டேன். அப்பகுதியில் தண்ணீர் நிரம்பிவிட்டது. மக்கள் சில நிமிடங்கள் பயந்துவிட்டனர்," என்று சம்பவத்தை நேரில் பார்த்த பூஜா பிஸ்வாஸ் என்ற பெண் தெரிவித்தார். ஒரு பெரிய பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், பெரிய சரளைக் கற்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. இந்த வினோத சம்பவத்தை அப்பகுதி மக்களும் வீடியோ எடுத்தனர்.
இதுபோன்ற ஒரு சம்பவம், 2020இல் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் உள்ள மருத்துவமனையில் உள்ள ஒரு கொரோனா வைரஸ் வார்டின், மேற்கூரையில் நிறுவப்பட்ட குழாய் திடீரென வெடித்ததால் மழைநீர் போல் ஏற்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்தது. இதுசார்ந்து, உள்ளாட்சி அமைப்பிலோ வேறு எந்த அரசு அமைப்போ பதில் அளிக்கவில்லை. தற்போது, குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ