ரயில் கட்டண உயர்வு தொடர்பாக மோடியை விமர்சித்த சித்தராமையா!

இந்திய ரயில்வேயின் கட்டண உயர்வு அறிவிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சித்தராமையா விமர்சித்துள்ளார்!

Last Updated : Jan 1, 2020, 08:47 PM IST
ரயில் கட்டண உயர்வு தொடர்பாக மோடியை விமர்சித்த சித்தராமையா! title=

இந்திய ரயில்வேயின் கட்டண உயர்வு அறிவிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சித்தராமையா விமர்சித்துள்ளார்!

இந்திய ரயில்வேயின் கட்டண உயர்வு அறிவிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, ரயில் கட்டணங்களை அதிகரித்ததற்குப் பதிலாக அரசியலமைப்பு மதிப்புகளுக்கு ஆதரவளித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசு அளித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் புறநகர் ரயில்களைத் தவிர்த்து ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.  இந்த அறிவிப்பின் படி, சாதாரண AC அல்லாத ரயில்களுக்கு கி.மீ.க்கு 1 பைசா, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு கி.மீ.க்கு 2 பைசா (AC  அல்லாத கோச்) மற்றும் AC  வகுப்புகளில் பயணம் செய்ய கி.மீ.க்கு 4 பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

"ராஜ்தானி, தத்தாபி, டுரான்டோ, வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சாஃபர், மகாமனா, கதிமான், அந்தியோடயா, கரிப் ராத், ஜான் சதாப்தி, ராஜ்ய ராணி, யுவா எக்ஸ்பிரஸ், சுவிதா மற்றும் சிறப்பு ரயில்களிலும் இந்த சிறப்பு கட்டணங்கள் பெறுந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது AC MEMU (புறநகர் அல்லாதது), AC DEMU (புறநகர் அல்லாதது) இதேபோல் அறிவிக்கப்பட்ட கட்டண அட்டவணையின்படி வர்க்க வாரியான கட்டணத்தில் மேலே குறிப்பிடப்பட்ட அதிகரிப்பு அளவிற்கு திருத்தப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்.,  ''ரயில் கட்டண உயர்வு என்பது நரேந்திர மோடி அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் புத்தாண்டுப் பரிசு. ரயில்வே போக்குவரத்து நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால் இந்தக் கட்டண உயர்வு நடவடிக்கை வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கும். அதற்கு பதிலாக, எங்கள் அரசியலமைப்பின் மதிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அரசாங்கம் எங்களுக்குப் பரிசளித்திருக்க வேண்டும்''. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராக நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக மத்திய அரசினை அரசியல் தலைவர்கள் சாடி வருகின்றனர். இந்நிலையில் சித்தராமையாவின் இந்த கருத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.

Trending News