சில்சார்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 6 பேர் இன்று அசாம் மாநிலத்தில் இருந்து வெளியேறினர்!
அசாம் மாநில குடிமக்கள் பெயர் அடங்கிய தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ள சர்ச்சை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு நேற்று அசாம் மாநிலம் சில்சாருக்கு சென்றது.
இந்த குழுவில் 6 MP , 1 MLA உள்பட 8 பேர் இடம்பெற்றுள்ளனர். நேற்று இரவு அஸாம் மாநிலம் சில்சார் சென்ற இக்குழுவினை சில்சார் விமான நிலையத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், இரவு முழுக்க விமான நிலையத்திலேயே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குழு கழித்தது.
இதனையடுத்து இன்று காலை இக்குழுவினை சேர்ந்த ஆறு பேர் விமானம் மூலமாக கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச்சென்றனர். மீதம் உள்ள இருவர் (மத்திய அமைச்சர் மம்தபாலா தாக்கூர், அர்பித் கோஷ்) இன்று பிற்பகல், சில்சார் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை நேற்று இரவு விமான நிலையத்தில் கைது செய்து வைத்திருந்ததால் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்ககது.