ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக அமேதியில் செயல்பட்ட முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பாஜக கட்சியை சேர்ந்த ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.
இந்நிலையில் ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட அக்கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுரேந்திரா சிங் என்பவரை நேற்றிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் மரணம் அடைந்து விட்டார். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.