வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராய்பரேலி செல்லும் சோனியா, பிரியங்கா

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை ராய்பரேலி தொகுதிக்கு செல்லும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 11, 2019, 02:21 PM IST
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராய்பரேலி செல்லும் சோனியா, பிரியங்கா
Photo: PTI

லக்னோ: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி நாளை (புதன்கிழமை), தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். அதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ராய்பரேலி தொகுதிக்கு செல்கிறார். அவருடன் அவரது மகள் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் உடன் செல்கிறார். உத்தரபிரதேசத்தில் 2019 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதி ராய்பரேலி என்பது குறிப்பிடத்தக்கது.

2019 மக்களவை தேர்தலில் ஏற்ப்பட்ட மோசமான தோல்வியை மறுபரிசீலனை செய்ய காங்கிரஸ் தயாராக உள்ளார். பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராயவும், கட்சியை வலுப்படுத்தவும் காங்கிரஸ் பல முடிவுகளை எடுத்து வருகிறது. மேலும் உத்திரபிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான உத்திகளை உருவாக்கவும் சோனியா காந்தி தயாராகி வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக ராய்பரேலி தொகுதிக்கு சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்கிறார்கள். அங்கு தனிப்பட்ட முறையில் வாக்களர்களை சந்திப்பார்கள். தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளனர். 

சமீபத்தில் நடந்த தேர்தல்களில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அமைச்சரான ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். ராகுல் காந்தி தோல்விக்கான காரணங்களை விசாரிக்க காங்கிரஸ் இரண்டு குழு உறுப்பினர்களை ஏற்கனவே நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.