தினசரி சமஸ்கிருத மொழியைப் பேசுவது நரம்பு மண்டலத்தை உயர்த்துவதோடு நீரிழிவு மற்றும் கொழுப்பைத் தடுக்க உதவும் என பாஜக MP தெரிவித்துள்ளார்!
பாஜக MP கணேஷ் சிங் வியாழக்கிழமை பேசுகையில்., ‘அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, தினசரி சமஸ்கிருத மொழியைப் பேசுவது நரம்பு மண்டலத்தை உயர்த்துவதோடு நீரிழிவு மற்றும் கொழுப்பை தடுக்கிறது என தெரிவித்துள்ளார். அவரது கருத்து தற்போது பிற மொழியினரிடையே சர்ச்சையினை தூண்டியுள்ளது.
சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற அவர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, சமஸ்கிருதத்தில் கணினி நிரலாக்கங்கள் செய்யப்பட்டால், அது குறைபாடற்றதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில இஸ்லாமிய மொழிகள் உட்பட உலகில் 97 சதவீதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா குறித்து சமஸ்கிருதத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி, மொழி மிகவும் நெகிழ்வானது, ஒரே ஒரு வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும் என்று தெரிவித்தார்.
Brother, Cow போன்ற பல்வேறு ஆங்கிலச் சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த பண்டைய மொழியின் ஊக்குவிப்பு வேறு எந்த மொழியையும் பாதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.