RUSA மற்றும் சம்கார சிக்ஷா எனப்படும் தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் உயர்கல்வி தரத்தினை உயர்த்துவதே மத்திய அரசின் திட்டம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!
மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் பல்வேறு கல்வித்திட்டங்கள் செயல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
அந்த திட்டங்களை செயல்படுத்த 117 மாவட்டங்கள் விரும்புவதாக தெரிவித்த அவர், திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்வித் திட்டங்களுக்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன்மூலம் 70 புதிய மாதிரிக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், ஏற்கெனவே உள்ள 29 கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகளாக மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமபுற பள்ளிகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தவும், SC/ST மாணவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையிலும் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து பள்ளிகளிலும் மின்சார வசதி அவசியம் இருத்தல் வேண்டும் என்பதில் மாநில அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இத்தகு செயல்பாடுகளுக்காக சம்கார சிக்ஷா திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் கொள்கைகளின் படி 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் இருத்தல் வேண்டும், அதன்படி மாநில அரசு பின்பற்றுதல் வேண்டும் என்றுமாய் அவர் மாநில அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.