ஷாஹீன் பாக் போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த சமரசம் குழுவை அமைத்த சுப்ரீம்கோர்ட்

குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சு வாரத்தை நடத்த மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Feb 17, 2020, 04:21 PM IST
ஷாஹீன் பாக் போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த சமரசம் குழுவை அமைத்த சுப்ரீம்கோர்ட்
Photo: PTI

புது டெல்லி: கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிராக பெண்கள் உட்பட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையை மூடப்பட்டு, வேறு சாலைகளில் வானகங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று ஷாஹீன் பாக் பிரச்சினை தொடர்பான விசாரணையின் போது, ​​போராட்டக்காரர்களுடன் பேச்சுவாரத்தை டெல்லி காவல்துறை மற்றும் தில்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 

திங்களன்று மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஒரு அடிப்படை உரிமை. அதற்காக சாலையைத் தடுக்காமல் அவர்கள் போராட்டங்களைத் தொடரலாம். விதிப்படி, டெல்லியில் போராட்டம் நடத்துவோ, தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவோ ஜந்தர்-மந்தர் பகுதியில் தான் சரியான இடம். இந்த விவகாரம் வாழ்க்கையை நிலைநிறுத்த சிக்கலுடன் தொடர்புடையது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் வழங்குமாறு டெல்லி காவல்துறை மற்றும் தில்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது, இப்போது இந்த விவகாரம் தொடர்பான அடுத்த விசாரணை பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும். 

ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை நீதிமன்றம் நியமித்தது. இவர்கள் போராட்டக்காரர்களைச் சந்தித்து, சாலை திறக்கவும், மற்றும் முற்றுகை காரணமாக பயணிகள் தொந்தரவு செய்யாமல் இருக்க வேறொரு இடத்தில் தங்கள் போராட்டத்தைத் தொடர அவர்களுடன் பேச முயற்சிப்பார்கள். முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா அவர்களுக்கு உதவுவார் என்று சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளது.

கடந்த விசாரணையில் நீதிமன்றம் கூறியது:
முந்தைய விசாரணையில், எந்தவொரு பொது இடத்திலும் போராட்டம் நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இருப்பினும், சாலையை காலி செய்ய எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள பொது சாலையை திறக்க உத்தரவிடுமாறு மனுதாரர் கேட்டுக் கொண்ட மனுவில் இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.